குஜராத் நகராட்சி, பஞ்சாயத்துகளிலும் பாஜக அபாரம்

Date:

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியை தொடர்ந்து நகராட்சி, பஞ்சாயத்துகளிலும் பாஜக அபாரமாக முன்னிலை பெற்றுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே பாஜக பல வார்டுகளில் முன்னிலை பெற்றது.

இறுதியாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 483 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 55 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. அசாதுதீனின் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 வார்டுகளை கைபற்றியுள்ளது. ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 வார்டுகளில் 93 இடங்களில் பாஜக வென்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. முதன்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி அங்கு முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இதில் மொத்தமுள்ள 31 மாவட்ட பஞ்சாயத்துகளிலும் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது. நகராட்சிகளை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 81 இடங்களில் 71 நகராட்சிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 நகராட்சிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பிறர் 2 நகராட்சிகளில் முன்னிலை பெற்றுள்ளனர்.

தாலுகா பஞ்சாயத்துகளில் மொத்தமுள்ள 231 இடங்களில் பாஜக 185 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மாநகராட்சி வார்டுகளை வென்ற ஆம் ஆத்மி இந்த தேர்தலில் எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை.

spot_imgspot_img

More like this
Related

உத்தேச மின்சார திருத்த சட்டமூலம் பற்றிய தீர்ப்பு சபாநாயகருக்கு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மின்சார திருத்த சட்டமூலத்தில் உள்ள சில...

விபத்துக்குள்ளான இந்திய விமானத்திலிருந்து ஒருவர் உயிருடன் மீட்பு!

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டனுக்குச் சென்ற ஏர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்