பேச்செல்லாம் நன்றாயிருக்கிறது; முதலில் தொடங்குங்கள்: ருவிற்றரில் கோட்டாவை கலாய்த்த மங்கள!

Date:

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான  உரிமையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வயது, பாலினம், இனம், உடல் தோற்றம், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இன்று நினைவுகூரப்படும் ஜீரோ பாகுபாடு தினத்தை குறிக்கும் வகையில் ஜனாதிபதி ருவிற்றரில் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதிவின் கீழ், கருத்திட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதியின் புத்திசாலித்தனத்தை பாராட்டியதோடு, ‘பேச்சை செயற்படுத்துவதற்கு இன்னும் தாமதமாகவில்லை’ என்றும் கூறினார்.

“வயது, பாலினம், பாலியல், இனம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கண்ணியத்துடன் வாழ்வதற்கான ஒவ்வொருவரின் உரிமையையும் பாதுகாக்க விரும்பும் அனைவரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தாமல் நாம் தொடங்க வேண்டும்” என்று சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்