வைத்தியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்!

Date:

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது.

நேற்றயதினம் இரவு குறித்த வைத்தியரின் வீட்டிற்குள் இரும்பு கம்பிகளுடன் நுழைந்த நான்கு நபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு, அவரது இரண்டு தொலைபேசிகள், மோட்டார் சைக்கிள் திறப்பு, மற்றும் சிறுதொகை பணத்தினையும் எடுத்து சென்றுள்ளதுடன், இரகசிய கண்காணிப்பு கமராவின் சேமிப்பகத்தையும் தூக்கிச்சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த வைத்தியர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

‘ஜெயிலர் 2’ ட்ரெய்லர் எப்படி? – முத்துவேல் பாண்டியனின் அதகளம்

ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி...

மேடையில் பிடுங்குப்பட்ட தற்குறிகள்!

திருச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றும்போது புரோட்டோக்கால் பின்பற்றாமல்...

மீண்டும் சிறை திரும்பினார் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்