வெறும் நான்கு கிலோமீற்றர்கள் இடைவெளியிலான இரண்டு தீவுகளுக்கு இடையில் 21 மணித்தியாலங்கள் நேர வித்தியாசம் உள்ள சுவாரஸ்ய தகவல் இது.
1867ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து, அலாஸ்கா பகுதியை
அமெரிக்கா வாங்கியது. அலாஸ்கா பகுதியில், உள்ள இரண்டு சிறிய தீவுகளே, அமெரிக்கா – ரஷ்யா நாடுகளின் எல்லைப்பகுதியாக விளங்கி வருகிறது.
1728 ஆம் ஆண்டு முதல் இந்த பகுதி ரஷ்யாவின் பகுதியாக உள்ளது. ரஷ்ய அறிஞர் விட்டஸ் பெரிங், இந்த தீவுகளில் வந்து இறங்கியதன் நினைவாக, இந்த தீவுகளுக்கு கிரேக்க துறவி டியோமெட் (Diomede) பெயர் வைக்கப்பட்டது. பரப்பளவின் அடிப்படையில், பெரிய டியோமெட் (Big Diomede) மற்றும் சிறிய டியோமெட் (Little Diomede) என்று தீவுகளிற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டு தீவுகளுக்கும் இடையேயான தொலைவு வெறும் நான்கு கிலோ மீற்றர்கள்தான். என்றாலும், இரண்டு தீவுகளிற்குமிடையில் 21 மணித்தியாலங்கள் நேர வித்தியாசமுள்ளது.
இதனால், Big Diomede தீவை Tomorrow Island என்றும், Little Diomede தீவை Yesterday Island என்றும் அழைப்பார்கள்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.