30.7 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

பிள்ளையான் கொடுத்த உத்தரவாதம்!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அதிபர் சேவை வகுப்பு மூன்றுக்கு உள்வாங்கப்பட்ட அதிபர்களில் தகைமை பெற்ற தமிழ்மொழி மூலமான அதிபர்கள் புறக்கணிக்கப்பட்டதனை சுட்டிகாட்டி இலங்கை அதிபர் சேவை 111 தகைமை பெற்ற அதிபர் சங்கத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிதுடன்ரூபவ் மகஜரும் கையளிக்கப்பட்டது.

அரச பாடசாலைகளில் நிலவும் அதிபர் சேவை 111 வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அரச வர்த்தமானி மூலமாக விண்ணப்பம்; கோரி பரீட்சை நடாத்தி நியமனம் வழங்கப்பட்டது.

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலங்களில் நிலவும் அதிபர் சேவை வெற்றிடங்களை அந்தந்த மொழி மூல விண்ணப்பதாரிகளைக் கொண்டு வெவ்வேறாக நிரப்படுமென 2014.10.22ம் திகதி மத்திய கல்வியமைச்சினால் வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவை பிரமானக்குறிப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழ் மொழி மூலமான வெற்றிடங்களையும் தமிழ் மொழி மூல விண்ணப்பதாரிகளைக் கவனத்திற் கொள்ளாமலும் சிங்கள மொழி மூலமானமானவர்களுக்கு கணிசமானளவு நியமனம் வழங்கப்பட்டது.

தமிழ் மொழி மூலமானவர்கள் 167 பேர் மாத்திரமே நிரப்பப்பட்டனர். இலங்கை அதிபர் சேவையின் துமிழ் மொழி மூலமான விண்ணப்பதாரிகள் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தோர் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழ்மொழி மூலமான அதிபர் வெற்றிடத்தை நிரப்பாமல் விடுவது எதிர்காலத்தில் எமது பாடசாலை கல்வி நிர்வாகத்திலும் எமது மாகாணம் கல்வியில் பிந்தங்கிச் செல்லும் என்பதனை தரம் பெற்ற இலங்கை அதிபர் சேவை சங்கம் மட்;டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் சுட்டிகாட்டியது.

ஜனாதிபதி, பிரதமர் மத்திய கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இவ்விடயத்தை உடனடியாக கவனத்திற் கொண்டு தமிழ் மொழி மூலமாக இலங்கை அதிபர் சேவை பரீட்சைக்குத் தோற்றி தகைமை பெற்று நியமனம் வழங்கப்படாமல் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான நியமனத்தை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என சிவநேசதுரை சந்திரகாந்தன் தரம் பெற்ற இலங்கை அதிபர் சேவை சங்கத்திடம் உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் இலங்கை அதிபர் சேவை தகைமை பெற்ற அதிபர் சங்கத்தின் தலைவர் எம்.றோட்னி, செயலளார் எம்.எச்.ரஸாம், இணைப்பாளர் எம்.எம்.ஹில்மி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment