பதுளை – நாரங்கல மலைத் தொடரில் நண்பர்களுடன் இரவில் கூடாரம் அமைத்து, தங்கியிருந்த நிலையில் இளைஞர் போன இளைஞனின் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
அவிசாவளையைச் சேர்ந்த அகலங்க பெரேரா (22) என்பரே சடலமாக மீட்கப்பட்டார்.
நண்பர்கள் 6 பேருடன் அங்கு சென்று கூடாரம் அமைத்து தங்கியிருந்தவர், இரவு 9.30 மணியளவில் மலசலக்கூடத்துக்கு சென்று வருவதாகக் கூறி சென்றுள்ளார். எனினும், அவர் திரும்ப வரவில்லை என பொலிஸாரிடம் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதலில், செங்குத்தான பள்ளத்தில் பாறையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.
அண்மையில் நடந்த பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அந்தப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்க தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1