Pagetamil
பிரதான செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பம்!

இலங்கை தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது.

கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, மூத்த துணைத்தலைவர்கள் சீ.வீ.கே.சிவஞானம், பொன்.செல்வராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோருடன் மத்திய குழுவில் அங்கம் வகிக்காத இரா.சாணக்கியனும் கலந்து கொண்டார்.

மத்திய குழுவின் ஏனைய உறுப்பினர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரக், சி.சிவமோகன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், கே.சயந்தன், குருகுலராஜப, சட்டத்தரணி கே.வி.தவராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 28

Pagetamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 27

Pagetamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 26

Pagetamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 25

Pagetamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 24

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!