வரலாற்றில் இன்று – பெப்ரவரி 26

Date:

நிகழ்வுகள்

364 – முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர்.

1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார்.

1616 – பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார்.

1658 – வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.

1748 – ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

1794 – கோபனாவன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.

1815 – இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் அங்கிருந்து தப்பினார்.

1841 – இலங்கையின் முதலாவது இசுக்கொட்லாந்து பிரெசுபிட்டேரியத் தேவாலயத்திற்கான அடிக்கல் கொழும்பு புறக்கோட்டையில் நாட்டப்பட்டது.

1876 – யப்பானியக் குடிமக்களுக்கு கொரியாவில் யப்பானிய வணிக வசதிகளுக்காக மூன்று துறைமுகங்களை அமைக்க, யப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1909 – கினிமாக்கலர் என்ற முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்பட அமைப்பு முறை இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குக் காண்பிக்கப்பட்டது.

1935 – இராபர்ட் வாட்சன்-வாட் என்பவர் இங்கிலாந்தில் நடத்திய பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் ரேடாரை உருவாக்க வழிசமைத்தது.

1936 – சப்பான் அரசைக் கவிழ்க்க நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

1952 – ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.

1960 – நியூயார்க் சென்று கொண்டிருந்த விமானம் அயர்லாந்தில் இடுகாடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 52 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.

1971 – ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார்.

1980 – எகிப்தும் இசுரேலும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்தின.

1984 – பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.

1991 – வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் உசேன் அறிவித்தார்.

1992 – நகோர்னோ-கரபாக் போர்: ஆர்மீனிய இராணுவத்தினர் அசர்பைசானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1993 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

2001 – ஆப்கானித்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.

2013 – வெப்பக் காற்று ஊதுபை ஒன்று எகிப்தில் வீழ்ந்து வெடித்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.

2018 – பப்புவா நியூ கினியின் ஏலா மாகாணத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர்,

spot_imgspot_img

More like this
Related

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...

இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்