கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாதியொருவர் நேற்று (26) உயிரிழந்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதலாவது தாதி இவராவார்.
மாவனெல்ல ஆதார வைத்தியசாலையிலேயே குறித்த தாதி உயிரிழந்துள்ளார்.
கண்டி தாதியர் பயிற்சிக் கல்லூரியிலிலிருந்து 1998ஆம் ஆண்டு வெளியேறிய, பிரியந்தி ரம்ய குமாரி என்பவரே உயிரிழந்தார். 2001 ஆம் ஆண்டுமுதல் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் தாதியாக தனது பணி புரிந்து வந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1