இலங்கையுடன் மோதும் மேற்கிந்திய ரி 20, ஒரு நாள் அணிகள் அறிவிப்பு: கிறிஸ் கெய்ல், பிடல் எட்வர்ட்ஸ்க்கு இடம்!

Date:

இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளிற்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 வருடங்களின் பின்னர் ரி20 அணியில் கிறிஸ் கெய்ல் இணைக்கப்பட்டுள்ளார். இரண்டு அணிகளிற்கும் கிரான் பொலார்ட் தலைமை தாங்குகிறார்.

மேற்கிந்திய தீவுகளிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, மார்ச் 3, 5 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் ரி 20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதற்கான மேற்கிந்தியத்தீவுகள் அணியில் மூத்த வீரர்கள் கிறிஸ் கெய்ல், பிடல் எட்வர்ட்ஸ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். ஓஃப்-ஸ்பின்னர் கெவின் சின்க்ளேர், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைன் ஆகியோர் சர்வதேச அறிமுகத்தை பெறுகிறார்கள்.

ஒருநாள் தொடர் மார்ச் 10, 12 மற்றும் 14 ஆகிய திகதிகளில் சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும். இறுதிப் போட்டி பகல் / இரவு போட்டியாக நடைபெறும்.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்