25 C
Jaffna
February 13, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

ஆணையாளரின் அறிக்கையை எப்படி?… எவ்வளவு காலத்திற்குள் நிறைவேற்றப் போகிறீர்கள்?: ஐ.நாவில் அமெரிக்கா அழுத்தம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் சமர்ப்பித்த அறிக்கையை செயற்படுத்த இலங்கை தனது மூலோபாயத்தையும், காலஅட்டவணையையும் வெளிப்படுத்த வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்த அறிக்கை மீதான ஊடாடும் உரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய, ஐநாவிற்கான அமெரிக்க நிரந்தர வதிவிட பிரதிநிதி டானியல் க்ரோனென்ஃபெல்ட் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறுபான்மை சமூகங்கள் ஓரங்கட்டப்படுதல் மற்றும் சுயாதீன ஊடகங்கள், சிவில் சமூகத்திற்கான இடைவெளிகளை சுருக்குவது போன்ற விடயங்களால் நாங்கள் கவலையடைகிறோம்” என்று க்ரோனென்ஃபெல்ட் கூறினார்.

“மோதல் கால துஷ்பிரயோகங்களுக்கு நம்பத்தகுந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளின் உயர் மட்ட நியமனங்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் பற்றாக்குறை குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் எழுப்பப்பட்ட கவலைகளை தீர்க்க இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு செயல்முறை மூலமான முயற்சிகள் அர்த்தமுள்ளதாகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும்.

இலங்கை அரசால் நிறுவப்பட்ட விசாரணை ஆணைக்குழு பொறுப்புக்கூறலைத் தொடர ஆணையைக் கொண்டிருக்கவில்லை என்பதை நாங்கள் கவனிக்கிறோம்,
காணாமல் போனவர்கள் மற்றும் இழப்பீடு வழங்கும் அலுவலகம் அரசியல் தலையீடு இல்லாமல் செயல்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளுக்கான மரியாதை இலங்கையின் நீண்டகால அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு முக்கியமானது. நீதி, மற்றும் நல்லிணக்கம், பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கான உறுதியான படிகளை இலங்கை அரசாங்கத்தை அர்த்தமுள்ளதாக எடுக்க அழைப்பு விடுத்தது,
,

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

1947ஆம் ஆண்டு உறுதி…80களில் போராளிகள் இடித்த விகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரையாக முளைத்த கதை: முழுமையான பின்னணி

Pagetamil

ஹிஸ்புல்லா, லெபனானை வம்புக்கு இழுக்கும் இஸ்ரேல்

east tamil

மின்தடைக்கான காரணத்தை நாளை சொல்வார்களாம்!

Pagetamil

டிரம்பின் தடைக்கு ஐசிசி எதிர்ப்பு

Pagetamil

மாவையின் இறுதிக்கிரியையில் சர்ச்சை பதாகை: பொலிசில் முறைப்பாடு!

Pagetamil

Leave a Comment