யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 4 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
வடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதில் 5 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் மன்னாரை சேர்ந்தவர்.
யாழ் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 5 பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவரும் அடங்குகிறார்.
ஏனைய 4 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள். அண்மையில் சிறைக்குள் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் இரண்டு பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்மையில் புத்தளத்தை சேர்ந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் அங்கு மரணவீடொன்றிற்கு வந்து சென்றதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் இரண்டு பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னாரில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.