ஜப்பானில் அதிகரித்து வரும் தற்கொலைகளை தவிர்ப்பதற்காக தனித்துறை ஒன்று உருவாக்கப்பட்டு அதற்காக தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு வருடமாக உலக நாடுகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக பொருளாதாரச் சரிவு மற்றும் வேலையின்மையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டில் கொரோனா வைரஸை விட ஜப்பானில் தற்கொலைகளுக்கு அதிக உயிர்களைப் பலி கொடுத்துள்ளது
அதுவும் குறிப்பாக ஜப்பானில் இந்த வருடம் அதிக எண்ணிக்கையிலான இளம் தலைமுறையினர் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.
ஜப்பானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்கொலைகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஜப்பான் அரசு தற்கொலைகளை தடுப்பதற்காக தனித்துறை ஒன்றை உருவாக்கியுள்ளது. அதற்கு பொறுப்பாக அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சகாமோடோ கூறும்போது, “ சிக்கலை ஆராய்ந்து அதற்கான தீர்வை வெளியிடுமாறு ஜப்பான் பிரதமர் சுகா என்னை அறிவுறுத்தி இருக்கிறார். சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், மக்களிடையேயான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.