பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தின் பூசாரி பிரிவு நேற்று இரவு (23) முதல் மூடப்பட்டுள்ளது. அங்கிருந்து யாரும் வெளியேறவோ, வெளியார் உள்நுழையவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.
செபெல்டன் பூசாரி தோட்டம் மற்றும் செல்வகந்தை ஆகிய பகுதிகளில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதில் இரண்டு பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த பகுதியில் தொற்றாளர் ஒருவர் நாட்பட்ட நோய்கள் அதிகரித்ததால் மரணித்திருந்தார்.
தொற்றாளர்களுடன் தொடர்புடைய சுமார் 100 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1