குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு!

Date:

இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் இன்று (23) முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டம் ஸ்கல்பா பிரிவில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 10 பேர் பெண் தொழிலாளர்களும், 02 ஆண் தொழிலாளர்களுமாவர்.

இவர்களில் 06 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், எஞ்சிய 06 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, மஸ்கெலியா மொக்கா தோட்டம் கீழ்பிரிவில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த ஆண் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 6 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்