பருத்தித்துறையில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அண்மையில், திருகோணமலையிலிருந்து பூசகர் ஒருவர் பருத்தித்துறைக்கு வந்திருந்தார். அவருக்கு தொற்று உறுதியாகியதையடுத்து, பருத்தித்துறையில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடஇந்து மகளிர் கல்லூரி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகியிருந்தது.
அவரது, கணவரான பூசகர், பிள்ளைகள் உள்ளிட்ட- அந்த 3 குடும்பத்தையும் சேர்ந்த 12 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், புலோலியில் தேவாலயம் ஒன்றிற்கு சென்று வந்த ஒருவருக்கும் தொற்று உறுதியானது. அந்த தேவாலய நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு இன்று தொற்று உறுதியானது.