25.8 C
Jaffna
December 11, 2024
Pagetamil
குற்றம்

யாழில் சூட்சும கொள்ளையர்கள் சிக்கினர்!

ஆட்டோவுக்கு பெற்ரோல் முடிந்து விட்டதாக கூறி வீதியோரத்தில் நின்று பணத்தை சூட்சுமமாக முறையில் வசூலித்து வந்த குழுவை நாவற்குழி இளைஞர்கள் மடக்கியப் பிடித்துள்ளனர்.

நேற்று இரவு 07:30 மணியளவில் இச்சம்பவம் நாவற்குழிப் பாலத்திற்கும் யாழ் வரவேற்பு வளைவுக்குமிடையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நாவற்குழிப் பாலத்தருகே குறித்த குழுவொன்று மாலை நேரங்களில் ஆட்டோவை நிறுத்தி வைத்து, வீதியால்ப் போய் வருவோரை மறித்து ஆட்டோவுக்கு பெற்ரோல் முடிந்து விட்டதாக கூறி பணம் மற்றும் பெற்றோலை சூட்சுமமாக கொள்ளையடித்து வந்துள்ளனர்.

இதனை தொடர்சியாக அவதானித்து வந்தவர்கள் இளைஞர்களிடம் கூறியுள்ளனர், இதனையடுத்து நாவற்குழி இளைஞர்கள் குறித்த பகுதிக்குச் சென்று சம்பவத்தை அவதானித்து, கொள்ளையர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இராணுவத்தினர் வருகை தந்திருந்த நிலையில்,சாவகச்சேரிப் பொலிஸாருக்கு இளைஞர்கள் தகவலை வழங்கியதையடுத்து பொலிஸார் வருகைதந்தனர்,

குறித்த கொள்ளைக் குழுவைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முழங்காவில் உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு

Pagetamil

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil

சிறுமியின் தலைமுடியை வெட்டிய வளர்ப்புத்தாய் கைது!

Pagetamil

மொடலாக மாற ஆசைப்பட்ட 23 வயது யுவதி வல்லுறவு!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

Leave a Comment