10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 52 வயது நபரை விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டது. எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை மனநல வைத்தியர் முன் ஆஜர்ப்படுத்தி, அது தொடர்பான அறக்கையையும் அடுத்த தவணையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுவனின் பெற்றோர் கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1