இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 10 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (21) அறிவித்துள்ளார்.
இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இருவர் இன்றும் (21), மூவர் நேற்றும் (20), இருவர் நேற்று முன்தினமும் (19), கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி இருவரும், பெப்ரவரி 14ஆம் திகதி ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
74, 82, 58, 72, 65, 68, 68, 83, 90, 72 வயதுகளையுடைய 7 ஆண்களும், 3 பெண்களுமே மரணித்தனர்.
கொலன்னாவை, வெள்ளவத்தை, களுத்துறை, வஸ்கடுவ, பிபிலை, குருத்தலாவை, பிட்டகோட்டே, குடாகல்கமுவ, இரத்மலானை, ஹட்டன் பிரதேசங்களில் இந்த மரணங்கள் பதிவாகின.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1