பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனிடம் பொலிசார் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
யாழ் மாநகரசபையிலுள்ள மணிவண்ணனின் அலுவலகத்தில் பருத்தித்துறை, மன்னார் பொலிசார் வாக்குமூலத்தை பெற்று வருகின்றனர்.
வாக்குமூலத்தை சிங்களத்தில் பதிவு செய்த பின்னர் அதில் மணிவண்ணனை கையொப்பமிட பொலிசார் கேட்டபோது, தனக்கு சிங்கள மொழி தெரியாதென தெரிவித்த மணிவண்ணன், தெரியாத மொழியில் உள்ள ஆவணத்தில் கையொப்பமிட முடியாதென மறுத்து விட்டார்.
தமிழில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டால் கையொப்பமிடுவேன் என்றார்.
இதையடுத்து, அந்த ஆவணத்தை தற்போது பொலிசார் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1