நெல்லியடி பொதுச்சந்தைக்குள் உணவகம் நடத்தும் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
வடக்கில் இன்று 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் 828 பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 2 பேர், நோய் அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற ஒருவர், அச்சுவேலி சந்தையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவர், முல்லைத்தீவில் ஒருவர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர், நெல்லியடி பொதுச்சந்தைக்குள் சிற்றுண்டிச்சாலை நடத்துபவர். நெல்லியடி சந்தைக்குள் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்