கொக்குவிலில் சடலம் மீட்பு

Date:

மட்டக்களப்பு – கொக்குவில், சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (11) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தங்க ஆபரண வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், சம்பவதினமான நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.

இந்தநிலையில் இன்று (11) சவுக்கடி கடற்கரை பகுதியில், ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக, பொது மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பிரவேசித்த பொலிஸார், தடயவியல் பிரிவு பொலிசாரையும் அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது உயிரிழந்தவர் செலுத்தியதாக கூறப்படும் மோட்டர் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்