யாழ் மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளில் தமிழரசு கட்சியை ஆதரிக்க தயாராகும் மணி அணி!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தாம் போட்டியிடாத சபைகளில், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்த தமிழ் மக்கள் கூட்டணி தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனும் இது தொடர்பில் சில கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர்.

யாழ் மாநகரசபை வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், வி.மணிவண்ணனின் அரசியல் கனவில் பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் அரசு கட்சியுடன் கூட்டு அமைக்க வாய்ப்பாக- தற்போது யாழ் மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளில் தமிழ் அரசு கட்சியை ஆதரிக்க வி.மணிவண்ணன் விரும்புகிறார்.

இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனுடன் அவர் சில பல பேச்சுக்களை நடத்தியும் விட்டார்.

எனினும், கட்சியின் செயலாளர் க.வி.விக்னேஸவரனை இந்த முடிவுக்கு சமரசம் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

எனினும், க.வி.விக்னேஸ்வரன் தரப்போ தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றில் விரும்பிய ஒன்றுக்கு வாக்களிக்க மக்களை கோருவதே சரியென நிலைப்பாட்டில் உள்ளது. அவரை சமரசம் செய்ய முயன்றால் வி.மணிவண்ணன் தரப்பினர் தமது நிலைப்பாட்டை விரைவில் பகிரங்கப்படுத்துவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...

சொகுசு பேருந்துக்கு தீவைத்த மர்ம நபர்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவெல–மாத்தறை வழித்தடத்தில் இயங்கி வந்த சொகுசுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்