கொடிகாமம் வாள்வெட்டு: 3 பேர் கைது!

Date:

கொடிகாமம் பகுதியில் உள்ள இளைஞனை தாக்கி அவரது வீடு புகுந்து சேதப்படுத்தி நகை பணம் கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் விசாரணைகளுக்கு பின்னர் நாளை சனிக்கிழமை (09) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி பகுதியில் கடந்த புதன்கிழமை வீதியால் சென்ற இளைஞன் மீது வன்முறைக் குழுவொன்று தாக்குதல் நடத்தியதுடன், குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று பெறுமதியான உடமைகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் இருந்த நகை,பணம் போன்ற பெறுமதியான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

காயப்பட்ட இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதில் உள்ள சவால்கள் என்ன?

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான வழிகளை பென்டகன்...

லிட்ரோ எரிவாயு விலைகள் எகிறின!

நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு...

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்