ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமாகும். பாராளுமன்ற தெரிவுக் குழுக்கள் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“சர்வதேச விசாரணை நடத்த அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் சுரேஷ் சாலி ஈடுபட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன். அவர் ராஜபக்ஷக்களின் கழிவறைகளை கழுவியவர். 2019 ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல்களிலும் ஈடுபட்டிருப்பார். அவர் அந்த நேரம் நாட்டில் இல்லையென்கிறார். அவர்கள் அந்த நேரம் மிகந்த செல்வாக்கானவர்கள். குடிவரவு குயகல்வு திணைக்களத்திலும் ஆவணங்களிலும் மாற்றம் செய்து இலங்கை வந்து சென்றிருக்கலாம்” என்று அவர் மேலும் கூறினார்.




