ஐயப்பன் கோயிலுக்கு வாங்கிய வாள்களை வீட்டு சுவாமியறையில் வைத்திருந்த கோண்டாவில் இளைஞன் கைது!

Date:

வீட்டு சுவாமியறையில் 2 வாள்களை வைத்திருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கோண்டாவில் மேற்கு, புகையிரத நிலைய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து இளைஞன் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று மாலை 6 மணி அளவில் வீட்டை சோதனையிட்டு, சுவாமியறையில் வைக்கப்பட்டிருந்த 2 வாள்களையும் மீட்டனர்.  கைது செய்யப்பட்ட இளைஞன், மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைதான இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் கோண்டாவில் கிழக்கு ஐயப்பன் ஆலய வருடாந்த உற்சவத்தின் சமய சடங்குகளுக்காக மேற்படி வாள்களை கொள்வனவு செய்தது தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்