குடும்பத்தினர் வெளியே வந்த பின்னர் திடீரென இடிந்து விழுந்த 2 மாடி வர்த்தக நிலையம்!

Date:

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை எனும் இடத்தில் 2 மாடி வர்த்தக நிலையமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

அப்பகுதி தாழிறங்கும் அபாயம் இருப்பதால் ஒரு வழி போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கம்பளை நகரிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவிலேயே அட்டபாகை அமைந்துள்ளது. அங்கு சிறிய நகரமொன்று உள்ளது. பிரதான வீதிக்கு அருகாமையிலேயே குறித்த வர்த்தக நிலையம் அமைந்திருந்தது.

எனினும், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் நேற்றிரவு (10) மேற்படி வர்த்தக நிலையம் முற்றாக சரிந்து விழுந்துள்ளது. பொருட்கள் அனைத்து மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.

வர்த்தக நிலையத்தில் இருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு, உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்த தருணத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனால் மூவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்