நேற்று 2,922 பேருக்கு தொற்று!

Date:

நேற்று 2,922 நபர்களுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 2,904 நபர்கள் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வந்த 18 நபர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.

அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா வைரஸ் தொற்று 339,092 ஆக உயர்ந்தது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு நேற்று வெளியிட்ட தகவலில்,  கடந்த வாரத்தில் இருந்து அறிவிக்கப்பட்டதில் தாமதமான மேலும் 3,223 COVID-19 தொற்றாளர்களை உறுதிப்படுத்தியது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2,644 நபர்கள் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 298,162 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 35,590 நபர்கள் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்