தாயின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை கேட்ட மகன்: கொடுக்காத ஆத்திரத்தில் கழுத்தை வெட்டிக் கொன்ற கொடூரம்! (PHOTOS)

Date:

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலிலுள்ள குமாரவேலியர் கிராமத்தில் தனது தாயாரின் கழுத்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்த 44 வயதுடைய மகனை கைது செய்துள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

குமாரவேலிய கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பொன்னுத்துரை தவமணி என்பவரே இவ்வாறு வெட்டிக் கொலைய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த தாயார் அவரது மகளுடன் வாழ்ந்துவரும் நிலையில் சம்பவதினமான இன்று பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த தாயாரின் வீட்டுக்கு சென்ற மகன் தாயாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கேட்டு சண்டை பிடித்த நிலையில் தாயார் சங்கிலியை கொடுக்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து மகனுக்கும் தாயாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அங்கிருந்த கத்தியால் தாயாரின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாயாரின் வீட்டுக்கு அருகிலேயேகொலையாளியன மகன் வசித்து வருகிறார். அவரது மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் பணிப்பெண்ணாக இருக்கிறார்.

சம்பவத்தின் போது கொலையாளி மதுபோதையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து தாயாரை வெட்டி கொலை செய்த 44 வயதுடைய மகனை கைது செய்ததுடன் சம்பவ இடத்திற்கு நீதவான் சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்