ஜி.பி முத்து மீது நடிகர் காதல் சுகுமார் போலீசில் புகார்

Date:

சூப்பர் டூப்பர் ஹிட்டான காதல் படம் மூலம் பிரபலமானவர் சுகுமார். அதனால் அவரை ரசிகர்கள் காதல் சுகுமார் என்று செல்லமாக அழைக்கிறார்கள். அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிக்டாக் பிரபலமான ஜி.பி. முத்து மீது புகார் அளித்திருக்கிறார்.

புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகுமார் கூறியதாவது,
கொரோனா நேரத்தில் குழந்தைகள் செல்போன் மூலம் தான் பாடம் படிக்கிறார்கள். ஆனால் இந்த இலக்கியா, ஜி.பி. முத்து போன்றோர் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். இதனால் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுச் செயலாளர் ஏழுமலை, டிஜிபி அலுவலகத்தில் அவர்கள் மீது புகார் அளித்தார்.

அது பற்றி நான் என் கருத்தை தெரிவித்தேன். இதையடுத்து ஜி.பி. முத்து, நெல்லை சங்கர், சேலம் மணி ஆகியோர் இணையதளம் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். ஆபாச வீடியோக்களாக இருக்கும் அவர்களின் சமூக வலைதள பக்கங்களை முடக்க வேண்டும். மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்