பழைய பொருட்கள் வாங்குவதை போல வந்தவர்கள் கைப்பையை திருடிக்கொண்டு தப்பியோட்டம்!

Date:

பழைய பொருட்கள் வாங்குவது போல் பாசாங்கு செய்து வந்த இருவர் வீட்டிலிருந்த கைப்பையை திருடிக்கொண்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் இன்று (06) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இரண்டு நபர்கள் சுழிபுரம் மத்தியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று பழைய பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என விசாரித்துள்ளனர்.

ஒருவர் இவ்வாறு வீட்டு உரிமையாளரிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது மற்றைய நபர் வீட்டினுள் சென்று அங்கிருந்த கைப்பையை தூக்கிக்கொண்டு தப்பியோட அவரைத் தொடர்ந்து மற்றையவரும் தப்பித்துச் சென்றுள்ளார்.

குறித்த கைப்பையில் பணம் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்