வீட்டிற்கு அருகில் கஞ்சா புதைத்து வைத்த வடமராட்சி கிழக்கு இளைஞன்!

Date:

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் ரூ .30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 107 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (22) வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரை பகுதி மற்றும் ஒரு வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டன.

கடற்படையினின் ரோந்து அணியை கண்ட ஒருவர் அருகிலுள்ள புதருக்குள் போதைப்பொருளை மறைத்து விட்டு தப்பிக்க முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில், அந்த பகுதியில் 16 பொட்டலங்களில் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில் அந்த பகுதியிலுள்ள வீடொன்றின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த  மேலும் 24 பொதி கஞ்சா மீட்கப்பட்டது.

சந்தேகநபரிடன் 107.840 கிலோகிராம் எடையுள்ள 40 பார்சல் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர் முள்ளியான் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர்.

சந்தேகநபருடன் கஞ்சா பொதிகளும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நேற்று 5 பேர் பலி

யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நான்கு சம்பவங்களில்...

சேரன் காணாமல் போன ஒரு வருடத்தின் பின் சந்தேகநபர்கள் கைது!

இளைஞர் ஒருவர் மாயமான விவகாரத்தில், கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு, ஒரு வருடத்திற்குப்...

எரிபொருள் விலைகள் எகிறின!

நேற்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்