எல்.பி.எல் தொடரில் இணையும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்!

Date:

2வது லங்கா பிரீமியர் லீக்கில் (எல்பிஎல்).ஆடுவதற்கு உலகின் பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

உலகின் முதல் நிலை சகலதுறை வீரர்களில் ஒருவராக பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசன், அவுஸ்திரேலிய சகலதுறை வீரர்ர்கள் பென் கட்டிங் மற்றும் ஜேம்ஸ் பால்க்னர், தென்னாபிரிக்க தேசிய அணியின் ஒருநாள் மற்றும் டி 20 கப்டன் டெம்பா பவுமா ஆகியோர் 2வது எல்.பி.எல் தொடரிற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்ட சிலராவார்.

மிட்செல் மெக்லெனகன், நிக்கோலஸ் பூரன், முகமது மஹ்மதுல்லா, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ரவி ராம்போல், டேவிட் வைஸ் மற்றும் கலாம் பெர்குசன் ஆகியோரும் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

சிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர், நேபாளத்தைச் சேர்ந்த சந்தீப் லாமிச்சேன், அமெரிக்காவின் அலி கான் ஆகியோரும்  பட்டியலில் உள்ளனர்.

கண்டி டஸ்கர்ஸ் அணியின் சகலதுறை வீரர் இர்பான் பதானின் சகோதரரான இந்தியாவின் யூசுப் பதானும் பதிவு செய்துள்ளார்

2வது எல்பிஎல் தொடருக்கு பதிவு செய்த வேறு சில சர்வதேச வீரர்கள்:

பங்களாதேஷ்: சகிப் அல் ஹசன், தமீம் இக்பால், மெஹதி ஹசன் மிராஸ், டஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், மஹ்மதுல்லா

அவுஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, பென் டங்க், காலம் பெர்குசன், ஜேம்ஸ் பால்க்னர், பென் கட்டிங்

மேற்கிந்திய தீவுகள்: நிக்கோலா பூரன், கோட்ரெல், ராயத் எம்ரிட், ரவி ராம்போல், டுவைன் ஸ்மித், டெனேஷ் ராம்டின், ஜோன்சன் சார்லஸ், ரோமன் பவல்

பாகிஸ்தான்: ஹரிஸ் சோஹைல், வகாஸ் மக்சூத், முகமது ஹஸ்னைன், முகமது இர்பான், ஷோயிப் மக்ஸூத், ஷான் மசூத், அன்வர் அலி, அம்மத் பட்

தென்னாபிரிக்கா: ரிலே ரோசோவ், டேவிட் வைஸ், ஜோன் ட்ரெவர் ஸ்மட்ஸ், மோர்ன் மோர்கல், ராஸி வான் டெர் டுசென், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்ஸி, ஹார்டஸ் வில்ஜோன், டெம்பா பவுமா

ஆப்கானிஸ்தான்: அஸ்கர் ஆப்கான், முகமது ஷாஜாத், நஜிபுல்லா சத்ரான், நவீன் உல் ஹக், உஸ்மான் ஷின்வாரி, ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா ஸசாய், நவீன் உல் ஹக், கைஸ் அஹ்மத்

ஏனைய நாடுகளை சேர்ந்தவர்கள்: யூசுப் பதான், பிரெண்டன் டெய்லர், சந்தீப் லாமிச்சான்ச், மிட்செல் மெக்லெனகன், அலி கான்

spot_imgspot_img

More like this
Related

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆவது ஆண்டு...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்