மன்னாரில் எரிகாயங்களினால் உயிரிழந்து கரையொதுங்கிய திமிங்கிலம்!

Date:

மன்னார்-முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கரடிக்குளி கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று இன்று சனிக்கிழமை (19) காலை கரை யொதுங்கியுள்ளது.

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய பின் மன்னார் மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ச்சியாக கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மன்னார்- முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கரடிக்குளி கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

ஏற்கனவே குறித்த கப்பலின் இரசாயன கழிவுகளினால் வாழ்வாதாரத் தொழில் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர்கள் குறித்த திமிங்கலம் கரை ஒதுங்கியதால் மேலும் அச்சமடைந்துனர்.

அண்மைக்காலமான மன்னார் மாவட்டத்தில் தாழ்வுபாடு,வங்காலை மற்றும் சிலாபத்துறை கடற்கரை பகுதிகளில் உயிரிழந்த நிலையிலும்,கடுமையான சேதங்களுடனும் கடலாமைகள் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்