யாழில் கட்டிட வேலையில் ஈடுபட்டவர் கீழே விழுந்து உயிரிழப்பு!

Date:

கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நீர்வேலியில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (36 ) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கட்டடத்தின் மேல் தளத்தில் தூண் போடும் பொழுது தவறி கீழே வீழ்ந்த அவர் மயங்கியுள்ளார்.

பின்னர் அவர் உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மரண விசாரணையை இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

வெவ்வேறு காலகட்டத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்… மயானத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்: செம்மணி புதைகுழி அறிக்கையின் முழுமையான தொகுப்பு!

செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த முதல் நிபுணர்...

மட்டக்களப்பு கடற்படையின் விசேட நடவடிக்கையில் கடலில் 2 கோடி ரூபா பெறுமதியான 4 சட்டவிரோத சுருக்குவலை மீட்பு —

மட்டக்களப்பு கடற்படையினர் சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி விசேட நடவடிக்கையின் போது...

செம்மணிப் புதைகுழி: தொற்றுநோய் கூற்றுக்குத் தமிழர் புலம்பெயர் செய்தி அமைப்பு கடும் கண்டனம்!

யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்