பழைய பேருந்துகளை கடலில் போடும் இலங்கைக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்!

Date:

இலங்கை மீன் வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன் பிடி கடற்பரப்பில் பயன் பாட்டில் இல்லாத பேரூந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் பேரூந்து எதிரே ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று புதன் கிழமை (16) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை பாதீப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லையில் இருந்து அருகே இந்திய இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன் பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர்.

பேரூந்துகள் கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும்; மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம்; காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லக் கூடும்.

இதனால் படகுகள் மற்றும் வலைகளை சேதமடைந்து படகு ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் நஸ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன் வளத்துறை இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர்.

அதேபோல் நாளுக்கு நாள் உயர்வடையும் எரிபொருள் விலையால் மீனவர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள்; கலால்,சாலை வரிகளை நீக்கி மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதன் கிழமை (16) ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்