தமிழ் தேசிய கூட்டமைப்பு- இந்திய தூதர் நாளை சந்திப்பு!

Date:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்கும், இலங்கைக்கான இந்திய தூதரிற்குமிடையில் நாளை (17) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

நாளை காலை இந்த கலந்துரையாடல் இந்திய இல்லத்தில் நடக்குமென தமிழ்பக்கம் அறிகிறது.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பிற்கு சென்ற கூட்டமைப்பின் தலைவர்கள், இந்த சந்திப்பிற்கான தொடர்ந்து கொழும்பில் தங்கியுள்ளனர்.

ஏற்கனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், கூட்டமைப்பிற்குமிடையில் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டிருந்தது. அநத தகவலை முதன்முதலாக தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது. எனினும், பின்னர் திடீரென சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.

இந்திய தூதருடனான சந்திப்பும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததுதான். இதுவும் இன்று நடக்கலாமென திட்டமிடப்பட்டு, ஜனாதிபதியுடன் கூட்டமைப்பிற்கு இன்று சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்ததால், நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பிற்கான அழைப்பை இந்திய தூதரகமே விடுத்துள்ளது.

அண்மையில் இலங்கையில் பல பாகங்கள் சீனாவிற்கு தாரை வார்க்கப்பட்டு வரும் நிலையில், திடீரென தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்திய தூதர் சந்திப்பிற்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி! தலைமுடி அறுக்கப்பட்டு, கண் பார்வை பாதிக்கும் அளவுக்கு ஆசிரியை மீது தாக்குதல்!

யாழ் நல்லுார்ப் பகுதியில் குடு்ம்பப் பெண் ஒருவர் தலைமுடிகள் அறுக்கப்பட்டு, கடுமையான...

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளை உள்ளடக்கி, அனர்த்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்