சூரிய கிரகணம் இன்று; நாசா சொன்ன முக்கிய தகவல்!

Date:

இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. உலகில் எந்தெந்தப் பகுதிகளில் இந்நிகழ்வை பார்க்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2021ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் கடந்த மாத இறுதியில் (மே 26) நிகழ்ந்த நிலையில் அடுத்த சில நாள்களில் முதல் சூரிய கிரகணம் இன்று (ஜூன் 10) நிகழ்கிறது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின்போது சூரியனை முழுமையாக மறைக்கும் தூரத்தில் நிலவு இருக்காது என்பதால், சூரியன் நிலவை மறைக்கும் போது சூரியன் நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது என்கிறார்கள். இந்தியாவில் பெரும்பாலானோர் பார்க்க முடியாது. லடாக், அருணாச்சல பிரதேசத்தில் உள்ளவர்கள் மட்டும் சில நிமிடங்கள், சிறிய அளவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சில பகுதிகள், வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் இந்தச் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும்.

கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாகப் பார்க்க முடியும் என நாசா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை விரட்டியடித்தது இலங்கை!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை,...

யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ...

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்