ஒன்லைன் வகுப்பிற்காக 6 கி.மீ. தூரம் பயணிக்கும் மாணவர்கள்!

Date:

கேரள மாநிலத்தில், ஒன்லைன் வகுப்புக்காக 6 கிலோ மீட்டர் தூரம் பயணித்து மாணவர்கள் கல்வி கற்று வருவது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஒன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, வீட்டிலேயே அனைவரும் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், ஒன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்காக, தினமும் ஆறு கிலோ மீட்டர் தூரம் பயணித்து கல்வி கற்று வருகின்றனர்.

இவர்கள், தங்களது கிராமத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா சாலையோரம் உட்கார்ந்து மொபைல் போன் மூலம் ஒன்லைனில் கல்வி கற்று வருகின்றனர்.

இது குறித்து, ராஜமாலா கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் கூறியதாவது:
எங்களது கிராமத்தில் சரிவர இன்டர்நெட் வசதி கிடைப்பது இல்லை. கிராமத்தில் ஒரு சில இடங்களில் இன்டர்நெட் வசதி கிடைத்தாலும், அது வேகமாக செயல்படுவதில்லை. தினமும் காலையில் ஆட்டோ ரிக்ஷா மூலம் இரவிகுளம் தேசிய பூங்கா பகுதிக்கு வருவோம்.

மாலையில், ஒன்லைன் வகுப்புகள் முடிந்த பிறகு வீட்டிற்கு நடந்தே செல்வோம். மழை பெய்யும் சமயங்களில் எங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். எங்களது பகுதியில் இன்டர்நெட் வசதி முறையாக கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மாணவர்கள் கூறினர்.

எதற்கெடுத்தாலும் டிஜிட்டல் இந்தியா என மார்தட்டி கொள்ளும் மத்திய அரசு, கிராமப் புறங்களில் உள்ளவர்களுக்கு டிஜிட்டல் என்ற அம்சத்தை காட்டுமா என்பதே தற்போதைய தேவையாக உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி  மாரியம்மன் கோவில் முன்றலில்  கடந்த மாதம் மட்டக்களப்பு...

பைத்தியக்கார ஈரானை கடுமையாக தாக்குவோம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்