2 பொது சுகாதார பரிசோதகர்களிற்கும் தொற்று: கிழக்கில் மேலுமொரு கிராமம் தனிமைப்படுத்தல்!

Date:

இன்று(3)  எழுமாறாக எடுக்கப்பட்ட அன்டீஜன் பரிசோதனையை தொடர்ந்து அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் இரு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியிடம் வினவியபோது இவ்விடயம் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணனிடம் கேட்டு பெற்று கொள்ளுமாறு ஊடகவியலாளரை கேட்டிருந்தார்.

இருந்த போதிலும் இரு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்முனை பிராந்தியத்தில் உள்ள சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பிரிவு முடக்கப்பட்டுள்ளது .இப்பிரதேசத்தில் மூன்று நாட்களில் 47 நோயாளிகள் மற்றும் ஒருவர் இறந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது.

-பா.டிலான்-

-;-

Share post:

spot_imgspot_img

More like this
Related

நாளை (ஏப்.16) 21 மாவட்டங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை

நாளை (ஏப்ரல் 16) வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு,...

மன்னாரில் படகு விபத்தில் மீனவர் பலி

மன்னார் கடல் பகுதியில் இன்று (15) அதிகாலை இரண்டு மீன்பிடிப் படகுகள்...

அதிரடிப்படையின் ஜீப் மோதி முதியவர் பலி

வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்