கல்முனையில் பரிதவித்த யாசகர்களிற்கு உதவிக்கரம்!

Date:

கொரோனா அனர்த்தத்தினால் பயணத்தடை கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள யாசகர்களுக்கு ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கிணங்க உணவு வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிராந்தியத்தில் பொது இடங்களில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள யாசகர்கள் பலர் உணவு இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.திங்கட்கிழமை(31) மாலை செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை அணுகிய யாசகர்கள் உணவின்றி சிரமப்படுவதாக தெரிவித்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கு இணங்க கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான அன்பு முகைடீன் ரோசன்அக்தர் பயணத்தடையினால் நிர்க்கதியான இப்பகுதியிலுள்ள 20 யாசகர்களுக்கு உணவுகளை வழங்கி வைத்தார்.

இந்த மனிதாபிமானப் பணியினை தனது சபை அமர்வில் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்