நேற்று மேல் மாகாணத்தில் இருந்து1,600 க்கும் மேற்பட்ட COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
நேற்று நாடு முழுவதும் 2,859 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 183,452 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று, கொழும்பு மாவட்டத்தில் இருந்து 608 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களில் 110 பேர் கொழும்பு நகரசபை பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 105 வெலிக்கட பகுதியையும், 91 பேர் முல்லேரியாவையும் சேர்ந்தவர்கள்.
கம்பஹா மாவட்டத்தில் 547 பேர் அடையாளம் காணப்பட்டனர். களுத்துறை மாவட்டத்தில் 447 பேர், காலி மாவட்டத்தில் 143 பேர், கேகாலை மாவட்டத்தில் 136 பேர், கண்டி மாவட்டத்தில் 108 பேர், குருநாகல் மாவட்டத்தில் 99 பேர், மாத்தறை மாவட்டத்தில் 82 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 78 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 57 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 56 பேர், ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் 50 பேர், அம்பாறை மாவட்டத்தில் 46 பேர், பதுளை மாவட்டத்தில் 43 பேர், புத்தளம் மாவட்டத்தில் 42 பேர், மொனராகலை மாவட்டத்தில் 40 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 39 பேர், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் தலா 31 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 29 பேர், வவுனியா மாவட்டத்தில் 22 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 17 பேர், மாத்தளை மாவட்டத்தில் 14 பேர், மன்னார் மாவட்டத்தில் 8 பேர், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 10 பேர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.




