கோலிக்கு நல்ல காலம் பிறக்க போவுது: அடிச்சு சொல்லும் இங்கிலாந்து வீரர்!

Date:

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் கோலி சதம் விளாச அதிக வாய்ப்புள்ளது என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் பேசியுள்ளார்.

இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி 2020ஆம் ஆண்டிலிருந்து ஒரு சதம் கூட எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இந்த வருடமாவது சதம் விளாசுவாரா? என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இந்திய அணி அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை சௌதாம்ப்டான் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. இது முடிந்ததும் இந்தியா, இங்கிலாந்து பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் விராட் கோலிதான் அதிக ரன்கள் குவித்த வீரராக இருப்பார் என இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் மாண்டி பனேசர் பேசியுள்ளார்.

“இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் கோலிதான் அதிக ரன்களை குவித்த வீரராக இருப்பார் எனக் கருதுகிறேன். அவர் 2020ஆம் ஆண்டுமுதல் இன்னும் ஒரு சதம் கூட விளாசவில்லை. தற்போது சதமெடுக்க வேண்டிய நெருக்கடியில் இருப்பதால், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது அதிரடி காட்ட வாய்ப்புள்ளது. அதிக ரன்கள் குவிக்கும் ஆற்றல் அவரிடம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பது குறித்துப் பேசிய பனேசர், இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம் என கூறினார்.

“நியூசிலாந்து அணிக்கு இங்கிலாந்து காலநிலை பழக்கப்பட்டதுதான். இருப்பினும் போட்டி 5 நாட்கள்வரை செல்லும் பட்சத்தில் இந்திய அணிதான் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் பேட்டிங் பந்துவீச்சு இரண்டிலும் வல்லவர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பிரபலமாக்கத் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், ஐந்து நாட்கள் போட்டி நடைபெறும் வகையில் மைதானம் வடிவமைக்கப்பட வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்