ஜோசப் பரராஜசிங்கம் மக்கள் அமைப்பு தலைவியிடம் துருவிதுருவி விசாரணை!

Date:

ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்பு தலைவியும், இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி நிர்வாக உறுப்பினருமான கந்தையா கலைவாணி என்பவரின் வீட்டுக்கு இன்று (29) சென்ற புலனாய்வு பொலிசார் இரண்டுமணி்நேரம் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுச் சென்றனர்.

மட்டக்களப்பு ஆறுமுகத்தான்குடியிருப்பில் வதியும் சமூக செயல்பாட்டளாராகவும் இலங்கை தமிழரசு கட்சி மகளிர் அணி உறுப்பினராகவும் செயல்படும் கந்தையா கலைவாணி மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்பின் தலைவராகவும் பல சமூகப்பணிகளை மேற்கொண்டு வருபவர்.

அவரிடம் இன்று சென்று சீருடை தரிக்காத தம்மை புலனாய்வு பொலிசார் என அடையாளப்படுத்தி காலை 10, மணிமுதல் நண்பகல் 12, மணிவரை விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின்போது ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்புக்கு எங்கிருந்து பணம் வருவது எனவும், அந்த அமைப்பால் இதுவரை செய்த சமூகசேவைகள் தொடர்பாகவும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணிகள் தொடர்பாகவும்,
அதன்பின்னர் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலயத்தில் மார்ச் மாதம் இடம்பெற்ற தொடர் உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாகவும் விசாரணை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்பால் ஒரேயொரு நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் மாணவர்களுக்காக கல்வி செயல்பாட்டு உபகரணங்களை மட்டும் வழங்கியதாகவும், அதற்கான நன்கொடையாக தமக்கு உள்ளூர் நண்பர்கள் 68,000 ரூபா மட்டும் தந்ததாகவும் அதன் வரவு செலவு அறிக்கையை தாம் காட்டியதாகவும் கூறியதுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் எமது இலங்கை தமிழரசு கட்சி தலைமையாலும் கலந்து கொள்ளுமாறு கேட்டதற்கு இணங்க தாம் கட்சி உறுப்பினர் என்ற ரீதியில் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதேவேளை கடந்த வாரம் மட்டக்களப்பு சிவில் அமைப்பு தலைவர் சீலன் என்பவரிடமும் இதேபோன்று விசாரணை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒரு புறத்தில் கொரோணா நோய் பரவல் காரணமாக பயணத்தடையுடன் வீட்டில் அனைவரும் இருக்கும் இவ்வேளையில் புலணாய்வு பொலிசார் சீவில் உடைகளில் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி. வவுணதீவு பொலிஸ் நிலையங்களில் கடமைபுரியும் சுமார் 45. பொலிசாருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் இவ்வாறான விசாரணைகள் வீடுகளில் சென்று இடம்பெற்று வருவதை யார்தான் கேட்கமுடியும் எனவும் கந்தையா கலைவாணி கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்