ஊரடங்கு கட்டுப்பாடுகள் ; சட்டவிரோத மது விற்பனை!

Date:

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டும் மதுக்கடைகள் செயல்படுகின்றன. மற்ற நேரங்களில் மூடப்படுகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் மதுக் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக ஒடிசாவில் இருந்து ஆந்திராவின் எல்லையோர மாவட்டங்களான விழியநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு நாள்தோறும் பல நூறு லிட்டர் மதுபானங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படுகின்றன. இவை ’குடி’மகன்களிடம் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இதையொட்டி சிறப்பு அமலாக்கப்பிரிவு ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தினசரி 200 முதல் 300 லிட்டர் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக சிறப்பு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,

மதுபானங்கள் மட்டுமின்றி மதுபான தயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருட்களையும் சட்டவிரோதமாக கொண்டு வருகின்றனர். இவற்றைக் கொண்டு ஆந்திராவின் எல்லையோர கிராமங்கள், நகரங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறது. இதை ஆட்டோ ரிக்‌ஷாக்கள், பைக்குகள் மற்றும் பிற வாகனங்களில் கொண்டு சென்று விற்கின்றனர்.

ஒரு லிட்டர் கள்ளச்சாராயம் ரூ.500 வரை விற்கப்பட்டு வருகிறது. தீவிர சோதனையில் ஈடுபட்டு கைப்பற்றப்படும் கள்ளச்சாராயத்தை அழிக்கும் செயல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இத்தகைய கள்ளச்சாராயத்தை பொதுமக்கள் யாரும் வாங்கி அருந்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்