அமெரிக்காவின் இண்டியானா பொலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
வியாழக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இந்த நிறுவனத்திற்குள் சப்மெஷின் கன் ஒன்றுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் கண்டறியப்படவில்லை.
அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 40 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
Audio released of the first reports by police about the mass casualty situation at an Indianapolis FedEx facility late Thursday night. pic.twitter.com/KGhNwJ4g1g
— WRTV Indianapolis (@wrtv) April 16, 2021




