வீட்டுக்குள் இரகசிய பங்கர் அமைத்து மறைந்திருந்த பிரபல தாதா சிக்கினார்!

Date:

முல்லேரியா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஜீடி என்றழைக்கப்படும் சரத் குமார என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உயிரிழந்த அங்கொட லொக்காவை ஆரம்பத்தில் குற்றச் செயல்களுக்கு ஈடுபடுத்தியவர் இவர் என சரத் குமார அடையாளம் காணப்பட்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முல்லேரியவில் உள்ள ஒரு வீட்டிற்குள் நிலத்தடி பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொண்டிருந்த நிலையில், அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலகமவில் விசேட அதிரடிப்படையினரால் 112 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் சம்பவத்தில், 44 வயதான இந்த நபர்  9 வது சந்தேக நபராக பெயரிடப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்