மெல்போர்னில் தரையிறங்கிய முதல் விமானம் இலங்கையுடையது!

Date:

அவுஸ்திரேலியாவின், விக்டோரியாவின் சர்வதேச ஹோட்டல் தனிமைப்படுத்தல் திட்டத்தின் கீழ் பல மாதங்களுக்கு பின்னர் மெல்போர்னில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானம் பெற்றுள்ளது.

அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் – 604 என்ற விமானம் அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானத்தில் பயணித்த 11 பயணிகள் பேருந்து மூலம் இருவார கால தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக பாதுகாப்புடன் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை டோஹா, சிங்கப்பூர் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானம் மூலமாக இன்றைய தினம் மொத்தம் 106 பயணிகள் வருவார்கள் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் பயணிகள் விமானங்கள் விக்டோரியா மாநிலத்தில் தரையிறங்கவில்லை.

கொவிட்-19 அச்சுறுத்தல்கள் காரணமாக ஹோட்டல்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிருந்து விலகின. மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளும் முடக்கல் நிலையில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...

‘கொண்ட ரஞ்சி’யின் பிஸ்டல் மீட்பு

மேல் மாகாண வடக்கு பிரிவு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்