அஞ்சலிக்கு கொரோனாவா?

Date:

தனக்கு கொரோனா தொற்று என்று வெளியாகியுள்ள செய்திகளுக்கு அஞ்சலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் பவன் கல்யாண், பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வக்கீல் சாப்’. நாளை (9) வெளியாகவுள்ள இந்தப் படத்தை தில் ராஜு மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். அரசியலிலிருந்து மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ள பவன் கல்யாண் நடித்த படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதில் நடித்துள்ள நிவேதா தாமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்தச் சமயத்தில் அஞ்சலிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு அஞ்சலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஞ்சலி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“எனக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை எனது நல விரும்பிகள், நண்பர்கள், அன்பார்ந்த ரசிகர்கள் என அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு தொற்று இருப்பதாகச் சில செய்திகள், இணையக் கட்டுரைகள் என் கவனத்தில் வந்தன. அவை முழுக்க பொய்யான தகவல்களாகும். நான் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக, நலமுடன் இருக்கிறேன். பாதுகாப்பாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்”

இவ்வாறு அஞ்சலி தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்