ஜொலிக்கும் மணமகள்… நொந்து நூடில்ஸான மணமகன்: காரணம் என்ன?

Date:

இந்தோனேஷியாவில் திருமணத்தின் போது மாப்பிள்ளை காயங்களுடன் வெறும் காற்சட்டை மட்டும் அணிந்தபடி உட்கார்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த திருமணம் கடந்த 2ஆம் திகதி நடைபெற்றுள்ளது. அப்போது மணப்பெண் அழகாக ஜொலிக்க, அவரை திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளையோ, உடலில் காயங்களுடன் ஒரு காற்சட்டை மட்டும் அணிந்த படி, திருமணம் செய்யும் இடத்திற்கு வந்து அமர்ந்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த சிலர் இதைப் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட, அது அதிக அளவில் பகிரப்பட்டது.

ஆனால், இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த 2ஆம் திகதி சுப்ராப்டோ என்பவரை எலிண்டா டிவி கிறிஸ்டியானி என்ற பெண் திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணம் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் நங்கன்ஜுக் ரீஜென்சியில் உள்ள லெங்காங் பகுதியில் நடைபெற்றுள்ளது.இதில், மாப்பிள்ளை ஆடை அணியாமல், உடலில் காயங்களுடன் இருந்தார்.

எலிண்டா டிவி கிறிஸ்டியானி கூறுகையில், திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு, அவர் பெட்ரோல் வாங்குவதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தினால் உடலில் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவரால் உடல் முழுவதும் ஆடை அணிய முடியாது. அதுமட்டுமின்றி அவர் அந்த விபத்தின் காரணமாக திடீரென்று சுயநினைவை இழந்ததாக கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்